திட்டங்களை ஒப்பிடுக

குழும திட்டங்களை புரிந்துகொள்ளுதல்

மற்ற எல்லா RESP திட்டங்களையும் விட இந்த ஒரு திட்டம் பற்றி மட்டும் SmartSAVERஇடம் பல கேள்விகள் கேட்கப் படுகின்றன: குழும RESP அல்லது படிப்புதவித் திட்டம்.

தனி நபர் திட்டங்களில் இருந்து குழும திட்டங்கள் பல வகைகளிலும் மாறுபட்டவை. எனினும், அதன் பிரதான தனித்துவத்தை, கனடாவின் RESP வர்த்தகர்கள் அமைப்பு (RESP Dealers Association of Canada) கீழே வழங்கியுள்ளது. இது பெரும்பாலான குழப்பத்தை தெளிவு பெறச் செய்யும்:

கட்டுக்கோப்பான சேமிப்பினை ஊக்குவிக்கும் வகையில் விளங்கும் குழும RESP திட்டங்கள், சீராக-நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் வழங்க உறுதியளிக்கும் குடும்பங்களுக்கு ஆர்வத்தை அளிக்கும்.

அதிக நெகிழ்ச்சியான சேமிப்புத் தெரிவுகளை வழங்கும் வகையில் விளங்கும் தனி நபர் RESP திட்டங்கள், சீராக-நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் வழங்க இயலாத குடும்பங்களுக்கு ஆர்வத்தை அளிக்கும்.

குழும திட்டங்களானவை சிக்கலான அல்லது புரிபடாத நிதி முதலீடுகள் ஆகும், மேலும் அவை நீண்ட கால பொறுப்புகள் ஆகும். உங்களது RESPக்கு, குழும திட்டம் ஒன்றை நீங்கள் கருத்தில் கொண்டிருந்தால், இந்த திட்ட தொகுப்புகளை படிப்பதில் இருந்து தொடங்குங்கள். ஒவ்வொரு குழும வழங்குநரும் கட்டாயம் வழங்கிட வேண்டிய இந்த தொகுப்புகள், நீங்கள் கட்ட வேண்டிய கட்டணங்கள் மற்றும் உங்களது முதலீட்டில் உள்ள அபாயங்கள் உட்பட, ஒவ்வொரு குழும திட்டத்தைப் பற்றியும் உங்களுக்கு ஒரு விரைவான கண்ணோட்டத்தை வழங்கி உதவும்.

C.S.T. Consultants Inc.

Children's Education Funds

Global

Heritage Education Funds

Knowledge First Financial

Universitas