உங்களது குழந்தையின் படிப்புக்கான அரசாங்கப் பணம்

உங்களது குழந்தையின் மேற்படிப்பு உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, ஆனால் உங்களால் அது எவ்வாறு இயலும் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். கனடா அரசு வழங்கும் இலவச பணம் கொண்டு உங்களது குழந்தையின் கல்விக்கான சேமிப்பைத் துவங்குங்கள். கனடா கல்வி கற்றல் பத்திரத்திற்கு விண்ணப்பிக்கவும். ஜனவரி 1, 2004 அல்லது அதற்குப் பின்னர் உங்களது குழந்தை பிறந்திருப்பின், மற்றும் தேசிய குழந்தை நல உதவி பெற நீங்கள் தகுதி உடையவராக இருப்பின், நீங்கள் உங்களது குழந்தைக்கு $2,000 வரை பெற இயலும்.

கனடா கல்வி கற்றல் பத்திரம் என்பது, நீங்கள் உங்களது பணம் எதுவும் பங்களிக்காமல் இருப்பினும், தகுதியுடைய ஒரு குழந்தையின் பதிவுசெய்யப்பட்ட கல்வி சேமிப்புகள் திட்டத்தில் (RESP) நேரடியாக செலுத்தப்படும் ஒரு பங்களிப்பாகும்.

RESPகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது, மற்றும், கனடா கல்வி கற்றல் பத்திரத்தைப் பெறுவது போன்றவற்றை SmartSAVER எளிதாக்குகிறது. கனடா முழுவதிலுமாக நாங்கள் RESP வழங்குநர்களோடு கூட்டு வைத்துள்ளோம். இவர்கள் $0விற்கு நீங்கள் ஒரு RESP தொடங்குவதற்கு உதவுவர்: சேர்க்கை கட்டணம் இல்லை, வருடாந்திர கட்டணம் இல்லை மற்றும் பங்களிப்பு எதுவும் தேவை இல்லை.

நீங்கள் தயார் எனில், எங்களது இணைய விண்ணப்பத்தை உபயோகிக்கவும், எனது RESPயை தொடங்கு, மேலும் கனடா கல்வி கற்றல் பத்திரத்திற்கு விண்ணப்பிக்கவும்.