எங்களைப் பற்றி

நாங்கள் யார்

SmartSAVER கனடிய குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கான சேமிப்பைத் தொடங்குவதற்கு இலவச அரசாங்கப் பணம் மற்றும் கணினியுடன் நேரடித் தொடர்பு அணுகல் பற்றிய தகவல்களை வழங்கி சேமிப்புத் தொடங்க உதவுகிறது.

SmartSAVER ஒரு இலாப நோக்கற்ற சமூகத் திட்டம். பதிவுசெய்யப்பட்ட கல்வி சேமிப்புகள் திட்டத்தை (RESP) பயன்படுத்தி உயர்நிலை பள்ளிக்குப் பிறகான கல்விக்காக அரசாங்கம் ஒதுக்கும் பணத்தை குடும்பங்கள் எளிதாகப் புரிந்து அணுகச் செய்வதே எங்கள் இலக்கு.

ஏன் RESPs (பதிவுசெய்யப்பட்ட கல்வி சேமிப்பு திட்டங்கள்) முக்கியம்?

உங்கள் குழந்தைகளின் உயர்நிலை பள்ளிக்குப் பிறகான கல்விக்காக சேமிக்க RESPயே சிறந்த வழி. ஏனெனில் இதற்காக கனடா அரசு உங்களுக்கு உதவுகிறது:

  1. கனடா கற்றல் ஒப்பந்தம்: உங்கள் வருமானத்தைப் பொறுத்து, ஒரு பதிவு செய்யப்பட்ட கல்வி சேமிப்புத் திட்டத்தை (RESP யை) தொடங்குவதன் மூலம் உங்கள் குழந்தையின் கல்விக்காக $2,000 வரை நீங்கள் பெற முடியும். இதற்காக நீங்கள் எந்தப் பணத்தையும் பங்களிக்க வேண்டியதில்லை.
  2. கனடா கல்வி சேமிப்பு வழங்கீடு: உங்கள் குழந்தையின் பதிவுசெய்யப்பட்ட கல்வி சேமிப்புத் திட்டத்திற்கு (RESP க்கு) உங்களால் பங்களிக்க முடியும் என்றால், உங்கள் சேமிப்பு மேலும் வேகமாக வளர அரசு மேலதிகமாக உதவும்.

SmartSAVER உதவக் கூடிய இரண்டு வழிகள்

முதலாவது, SmartSAVER குழந்தைகளின் கல்விக்காக அரசாங்கப் பணத்தைப் பெறத் தேவையான தகவல்களைக் குடும்பங்களுக்கு வழங்குகிறது.

இரண்டாவது, Start My RESP (என் RESP தொடக்கம்) பயன்பாட்டை பயன்படுத்தி, குடும்பங்கள் தம் RESP மற்றும் கனடா கற்றல் ஒப்பந்தத்திற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் ஆரம்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் ஒரு RESP யை $0 விற்கு தொடங்குவதற்கு SmartSAVER, கனடா முழுவதும்உள்ள நிதி நிறுவனங்களுடன் இணைந்து உதவுகிறது: சேர்க்கை கட்டணம் இல்லை, வருடாந்திர கட்டணம் இல்லை மற்றும் எந்தப் பங்களிப்பும் தேவை இல்லை.

எங்கள் பங்காளர்கள்

குடும்பங்களுக்கு கனடா கற்றல் ஒப்பந்தத்தை பெற்றுத்தர உதவுவதில் உறுதியாக உள்ள எந்த ஒரு RESP வழங்குநரையும், Smart SAVER தங்களுடன் இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கிறது. நீங்கள் தகுதியுள்ள குடும்பங்களுக்கு $0 வில் (சேர்க்கை கட்டணமோ, வருடாந்திர கட்டணமோ, குறைந்த பட்ச பங்களிப்போ இல்லாமல் ஒரு RESPயை திறக்க உதவக் கூடிய ஒரு RESP வழங்குநர் என்றால், இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

சேவை பெறும் குடும்பங்கள், கனடா கற்றல் ஒப்பந்தம் பற்றியும் மற்றும் அதை எப்படிப் பெறுவது என்பதைப் பற்றியும் அறிய, SmartSAVER பல்வேறு இலாப நோக்கற்ற சமூக சேவைகளுடன் இணைந்து செயல்படுகிறது. நீங்கள் கனடா கற்றல் ஒப்பந்தத்திற்குத் தகுதியுள்ள குடும்பங்களுக்கு சேவை செய்யும் ஒரு சமூக அமைப்பாக இருந்தால், நீங்கள் எவ்வாறு ஈடுபடலாம் என்பதை அறிய இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளவும்.