எவ்வாறு தொடங்குவது

கேள்விகள்

 1. எனது நிதி நிறுவனத்திடம் நேரடியாக செல்லாமல் SmartSAVER வழங்கும் ‘எனது RESPயை தொடங்கு’ இணைய விண்ணப்பத்தை நான் ஏன் பயன்படுத்த வேண்டும்?

  உங்களுக்கு எது மிகவும் வசதியாக உணர்கின்றீர்களோ அவ்வாறே உங்களது RESPயை நீங்கள் தொடங்கலாம். ‘எனது RESPயை தொடங்கு’ – இணையத்தின் மூலம் உபயோகித்திடும் வசதியை வழங்குகிறது. அதன் பயன்பாடு பயனர் தோழமைமிக்கது. மேலும், கட்டணம்-இல்லாத மற்றும் குறைந்தபட்ச பங்களிப்பு எதுவும் இல்லாத RESPகள் வழங்கும் RESP வழங்குநர்களோடு நேரடி இணைப்பினைக் கொண்டுள்ளது. எனினும், எங்களது கூட்டாளி நிதி நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றிற்கு நீங்கள் நேரில் சென்றும் அதே RESPகளை கேட்டுப் பெறலாம்.

 2. ‘எனது RESPயை தொடங்கு’ – இதில் எனது நிதி நிறுவனம் ஒரு விருப்பத் தேர்வாக இல்லையெனில் என்ன செய்வது?

  ‘எனது RESPயை தொடங்கு’ விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு எங்களது நிதி நிறுவன கூட்டாளிகள் எவருடனும் நீங்கள் தற்போதைய வாடிக்கையாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கனடா கல்வி கற்றல் பத்திரம் (Canada Learning Bond) பெற்றிட நீங்கள் எந்த ஒரு RESP வழங்குநரிடம் வேண்டுமானாலும் கணக்கினைத் தொடங்கிடலாம்.

  மாறாக, உங்களது தற்போதைய நிதி நிறுவனத்தை நீங்கள் தொடர்புகொண்டு, கனடா கல்வி கற்றல் பத்திரம் பெற்றிட ஒரு RESPயை தொடங்குவதற்கு உதவுமாறு கேட்கலாம்.

 3. நிதி நிறுவனம் என்னை எப்பொழுது தொடர்பு கொள்ளும்?

  நீங்கள் தேர்வு செய்த நிதி நிறுவனத்திற்கு உங்களது விண்ணப்பம் நேரடியாக அனுப்பிவைக்கப் படுகிறது. உங்களது விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், உங்களது நிதி நிறுவனம் உங்களை 2 முதல் 3 வேலை நாட்களுக்குள் தொடர்பு கொள்ளும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பித்த பின்னர், உங்களை எவரும் தொடர்பு கொள்ளவே இல்லை என்று நீங்கள் கவலை கொண்டால், info@smartsaver.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 1-855-RESP-CLB (737-7252) என்ற எண்ணிலோ SmartSAVERஐ தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.

 4. நான் முன்னரே RESP வைத்துள்ளேன். கனடா கல்வி கற்றல் பத்திரம் (Canada Learning Bond) எனக்கு கிடைக்குமா?

  நீங்கள் முன்னரே RESP வைத்திருந்தால், நீங்கள் முன்னரே கனடா கல்வி கற்றல் பத்திரமும் வைத்திருக்கக் கூடும். அது பற்றி அறிய உங்களது RESP வழங்குநரை தொடர்பு கொள்ளவும்.

 5. ‘எனது RESPயை தொடங்கு’ – இதனை யார் பயன்படுத்தலாம்?

  கனடா கல்வி கற்றல் பத்திரம் (Canada Learning Bond) பெறுவதற்கான தகுதியைப் பெற்ற குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே ‘எனது RESPயை தொடங்கு’ உருவாக்கப்பட்டது. கனடா கல்வி கற்றல் பத்திரம் பெறுவதற்கான தகுதிகள் பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்.

 6. SmartSAVER.orgஇல் உள்ள ‘எனது RESPயை தொடங்கு’ விண்ணப்பம் பற்றி நான் யாரிடம் கேட்கலாம்?

  info@smartsaver.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 1-855-RESP-CLB (737-7252) என்ற எண்ணிலோ எங்களை தயவுசெய்து தொடர்பு கொள்ளவும். மொழி பெயர்ப்பு சேவைகளுடன் கூடிய நேரலை உதவி இங்கு திங்கள் முதல் வெள்ளிக் கிழமைகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை கிடைக்கும்.

 7. என்னைப் பற்றிய தகவல்களை நீங்கள் என்ன செய்கின்றீர்கள், அது எவ்வாறு சேமிக்கப்படுகிறது?

  உங்களைப் பற்றிய தகவல்கள், உங்களது RESPயை தொடங்குவதற்காக நீங்கள் தேர்வு செய்த நிதி நிறுவனத்திற்கு மட்டுமே, பத்திரமான முறையில் அனுப்பி வைக்கப்படுகிறது. சமுதாயக் காப்பீட்டு எண் போன்ற உங்களைப் பற்றிய முக்கிய தகவல்களை SmartSAVER சேமித்து வைப்பதில்லை. உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம் என்பது பற்றி மேலும் அறிய, எங்களது தகவல் பாதுகாப்புக் கொள்கையை பார்க்கவும்.

 8. ‘எனது RESPயை தொடங்கு’ மூலம் RESP தொடங்கிட எவ்வளவு செலவாகும்?

  SmartSAVERஇல் ‘எனது RESPயை தொடங்கு’ இணைய விண்ணப்பத்தை பயன்படுத்தி ஒரு RESPயை தொடங்க கட்டணம் எதுவும் இல்லை. கணக்கு தொடங்குவதற்கான கட்டணமோ, சேர்க்கை கட்டணமோ அல்லது வருடாந்திர கட்டணமோ வசூலிக்காமலும் குறைந்தபட்ச பங்களிப்பின் தேவை இல்லாமலும் RESPகள் வழங்கக்கூடிய RESP வழங்குநர்களுடன் மட்டுமே SmartSAVER கூட்டு வைத்துள்ளது. கனடா கல்வி கற்றல் பத்திரம் (Canada Learning Bond) பெற்றிட உங்களது குழந்தையின் RESPஇல் நீங்கள் பணம் பங்களிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.

 9. இதில் ஏதேனும் பொறி இருக்கிறதா?

  கனடா கல்வி கற்றல் பத்திரம் (Canada Learning Bond) அளிக்கும் மானியத்தை உயர்நிலைக் கல்விக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். அதுவும் 36 வயதுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். உங்களது குழந்தை உயர்நிலைக் கல்வி எதிலும் பங்கெடுக்கவில்லை எனில், கனடா கல்வி கற்றல் பத்திரம் மூலமாகவும் மற்றும் வேறு ஏதேனும் இணை மானியங்கள் கிடைக்கப் பெற்றிருந்தாலும் அவற்றை அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். உங்களது குழந்தையின் RESPக்கு நீங்கள் வழங்கிய பணம் அனைத்தும் எப்பொழுதும் உங்களது சொத்தாகவே இருக்கும். அதை எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் திரும்பப் பெறலாம்.