இலவச கல்வித் தொகை

மாநில உதவித்தொகைகள்

BC பயிற்சி மற்றும் கல்வி சேமிப்புகள் உதவித்தொகை

6 முதல் 9 வயதுக்கு உட்பட்ட அனைத்து BC குழந்தைகளுக்கும், ஒரு முறை மட்டுமே பெறக்கூடிய $1,200 சேமிப்புகள் உதவித்தொகையை BC அரசாங்கம் வழங்குகின்றது. இந்த இலவச பணத்தை நீங்கள் பெறுவதை உறுதிப்படுத்த, உங்களது குழந்தை RESP கணக்கு ஒன்று வைத்திருக்க வேண்டும். BC அரசாங்கத்திடம் இருந்து இந்த உதவிதொகையைப் பெற்றிட, உங்களது சொந்த பணம் எதையும் நீங்கள் இந்த கணக்கில் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களது குழந்தை கனடா கல்வி கற்றல் பத்திரம், பெறத் தகுதி பெற்று இருப்பின், இந்த இரண்டு உதவித் தொகையையுமே நீங்கள் இலவசமாகப் பெறுவீர்கள்!

உங்களது குழந்தை இந்த BC உதவிதொகையைப் பெற இயலுமா?

ஜனவரி 1, 2006 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்த அனைத்து குழந்தைகளும், விண்ணப்பிக்கும் சமயத்தில் அவர்களது பெற்றோரோ அல்லது சட்டப்பூர்வமான பாதுகாப்பாளரோ BC மாநிலத்தில் வசிப்பார்களேயானால், இந்த BC உதவித்தொகையை பெறலாம்.

எனது குழந்தையின் BC உதவித்தொகையை எவ்வாறு நான் பெறுவது?

BC உதவித்தொகையைப் பெறுவதற்கு, RESP கணக்கு ஒன்றைத் திறக்கவும். அரசு அதில் பணத்தை சேமித்து விடும். உங்களது குழந்தைக்கு 6 வயது பூர்த்தியான உடன் உங்களது RESP வழங்குனரிடம் BC உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கவும். உங்களது குழந்தைக்கு 9 வயது பூர்த்தி ஆவதற்கு முன்னர் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

BC உதவித்தொகையை நான் பெற்றிட SmartSAVER உதவுமா?

ஆம்! கனடா கல்வி கற்றல் பத்திரம் மற்றும் BC உதவித்தொகையைப் பெற்றிட SmartSAVERஇன் இணைய விண்ணப்பம் உங்களுக்கு உதவும். எங்களது வங்கிப் பங்காளர்கள், இந்தப் புதிய உதவித்தொகையை வழங்கிடத் தயாராகி வருகின்றனர். நாங்கள் இதில் அவர்களது முன்னேற்றத்தை கண்காணித்து வருகிறோம். இந்த இலவச உதவித்தொகையை உங்கள் குழந்தை பெறுவதை உறுதி செய்திட ஏதேனும் கூடுதல் நடவடிக்கைகள் இருப்பின் உங்களைத் தொடர்புகொள்ளுவோம்.

எனது குழந்தை தற்பொழுது கிட்டத்தட்ட 9 வயதை எட்டி இருப்பின்?

தனது 9வது பிறந்தநாளை நெருங்கும் குழந்தைகளது விண்ணப்பத்திற்கான கால வரையறையை BC அரசாங்கம் நீட்டித்துள்ளது. விண்ணப்பத்திற்கான கால வரையறைகளின் பட்டியலை இங்கே பார்க்கவும்.

அல்பெர்டா நூற்றாண்டு நிறைவு கல்வி சேமிப்புகள் உதவித்தொகை - July 31, 2015 அன்று நிறைவு பெற்றது