திட்டங்களை ஒப்பிடுக

smartsaver.org இல் கட்டணம்-இல்லா RESP திட்டங்கள்

அதிகூடிய நெகிழ்ச்சியான திட்டம், அதாவது, கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்ட தனி நபர் RESP திட்டம் ஒன்றை வழங்கக்கூடிய RESP வழங்குநர்களோடு மட்டுமே கூட்டு வைத்து, நீங்கள் RESP திட்டம் ஒன்றைத் தொடங்கி, கனடா கல்வி கற்றல் பத்திரத்தை (Canada Learning Bond) பெறுவதை SmartSAVER எளிதாக்குகிறது:

  • கணக்கைத் தொடங்குவதற்கான கட்டணமோ, சேர்க்கை கட்டணமோ அல்லது வருடாந்திர கட்டணமோ இல்லை; மேலும்
  • குறைந்தபட்ச பங்களிப்புக்கான கட்டாயம் எதுவும் இல்லை.

SmartSAVERஇன் Start My RESP எனும் இணையதள விண்ணப்பத்தை உபயோகித்து உங்களது RESPயை கீழ்க்கண்ட RESP வழங்குநர்களில் எவரோடும் தொடங்குங்கள்.

RESP வழங்குநர்களே: கணக்கு தொடங்குவதற்கான கட்டணமோ, சேர்க்கை கட்டணமோ அல்லது வருடாந்திர கட்டணமோ வசூலிக்காமலும் குறைந்தபட்ச பங்களிப்பின் தேவை இல்லாமலும், தனி நபர் RESP திட்டம் வழங்குபவராய் நீங்கள் இருப்பின், இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ள SmartSAVERஐ தொடர்பு கொள்ளவும்.