திட்டங்களை ஒப்பிடுக

RESP திட்டம் ஒன்றை தேர்ந்தெடுப்பது

தேர்ந்தெடுப்பதற்குப் பல RESP வழங்குநர்கள் உள்ளனர், ஆனால், கனடா கல்வி கற்றல் பத்திர திட்டத்தை (Canada Learning Bond) அனைவரும் வழங்குவதில்லை. RESP வழங்குநர்களின் முழுமையான பட்டியலுக்கு இங்கே சொடுக்கவும்.

தங்களது தேவைகள் மற்றும் கட்டுப்பாடுகளில் RESP திட்டங்கள் பல விதங்களிலும் மாறுபட்டவை. RESPயைத் தொடங்கும் பொழுதே சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், அது பின்னாளில் நீங்கள் கவலை இல்லாமலும் பணத்தை சேமிக்கும் வகையிலும் அமையும்.

RESPயைத் தேர்ந்தெடுக்கும் பொழுது கீழ்க்கண்டவை இன்றியமையாதவை:

  • RESP திட்டத்தில் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்திருப்பது;
  • உங்களுக்கு வழங்கப்படுவது என்ன என்பதைப் புரிந்திருப்பது; மற்றும்
  • நீங்கள் தேர்ந்தெடுப்பது உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது.

சரியான RESP திட்டத்தைத் தேர்ந்தெடுக்க மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.