இலவச கல்வித் தொகை

கனடா கல்வி கற்றல் பத்திரம்

இலவச கல்விப் பணத்தின் மூலம் $2,000 வரை பணத்தைப் பெறலாம்... உண்மையாகவே! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பதிவுசெய்யப்பட்ட கல்வி சேமிப்புகள் திட்டம் (RESP) ஒன்றை துவங்க வேண்டும். கனடா தேசத்து அரசாங்கத்திடம் இருந்து இந்த பணத்தைப் பெறுவதற்கு உங்கள் பணம் எதையும் செலுத்தத் தேவையில்லை. ஒரு RESPஐ தொடங்குகையில், உடனடியாக $500 பணத்தை அரசு வழங்கிவிடும், உங்கள் குழந்தைக்கு 15 வயது முடியும் போது இன்னும் அதிகமாக $1,500 வரை பணம் வழங்கப்படும். அதாவது மேல்நிலைப் பள்ளிக்குப் பின் உங்கள் குழந்தையின் கல்விக்கு $2,000 வரை வழங்கப்படும்.

கனடாவின் கல்வி கற்றல் பத்திரம் உங்கள் குழந்தைக்கு கிடைக்குமா?

உங்கள் குழந்தை ஜனவரி 1, 2004 அல்லது அதற்கு பின் பிறந்திருந்தால், உங்கள் குழந்தைக்கு கனடாவின் கல்வி கற்றல் பத்திரம் கிடைக்கும்.

உங்கள் குழந்தையின் கனடாவின் கல்வி கற்றல் பத்திரத்தை இன்றே பெற்றுக் கொள்வீர்!

எனது குழந்தையின் கனடா கற்றல் பத்திரத்தை நான் எப்படிப் பெறுவது?

கனடா கற்றல் பத்திரத்தைப் பெறுவதற்கு அரசு பணம் செலுத்துவதற்கு வசதி பெற்ற உரிமம் பெற்ற RESP வழங்குநரிடம் ஒரு RESP கணக்கைத் தொடங்க வேண்டும். ஒரு கல்வி சேமிப்புகள் திட்டத்தில் பதிவு செய்ய நீங்களும் உங்கள் குழந்தையும் ஒரு சமுதாய காப்பீட்டு எண்ணை வைத்திருக்க வேண்டும்.

இதன் பிடிமானம் என்ன?

கனடா கற்றல் பத்திரத்தை இடைநிலைக் கல்விக்கு பின் தான் பயன்படுத்த முடியும். அதனை உங்கள் குழந்தை பயன்படுத்த வேண்டும் அல்லது இழக்க வேண்டும்! மேல்நிலைப் பள்ளிக்குப் பின் உங்கள் குழந்தை கல்வி கற்காவிட்டால், கனடா கல்வி கற்றல் பத்திரத்தை அரசு திரும்ப பெற்றுக் கொள்ளும்.

கனடா அரசாங்கத்தின் கனடா கல்வி கற்றல் பத்திர விளக்கப்பிரதியின் மூலம் மேலும் அறிந்து கொள்ளவும்.

கனடா கல்வி கற்றல் பத்திரத்திற்கு உங்கள் குழந்தை தகுதி பெறாவிட்டாலும், உங்கள் குழந்தையின் கல்விக்காக இன்னும் கூட அரசாங்கத்திடம் இருந்து நீங்கள் பணம் பெற முடியும். கனடா கல்வி சேமிப்புகள் உதவித்தொகை பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்.