இலவச கல்வி பணம்

கனடா கல்வி சேமிப்புகள் உதவித்தொகை

கனடா கல்வி சேமிப்புகள் உதவித்தொகை (CESG) என்பது மேல்நிலைப் பள்ளிக்கு பின் உங்கள் குழந்தையின் கல்விக்காக கனடா அரசாங்கம் பணம் வழங்குவதற்கான மற்றொரு வழியாகும். ஒரு RESPஇல் நீங்கள் பணம் செலுத்துகையில், உங்கள் குழந்தைக்கான சேமிப்புகள் வேகமாக வளர்வதற்கு உதவ அரசாங்கமும் பணம் செலுத்தும்.

எனது குழந்தைக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்?

கனடாவின் கல்விச் சேமிப்புகள் உதவித்தொகையை அனைவருமே பெறலாம், ஆனால் உங்கள் குடும்பத்தின் மொத்த வருமானங்கள் வரிகள் செலுத்தியது போக எவ்வளவு உள்ளதோ அதனைப் பொருத்து அரசாங்கமும் செலுத்தும். உங்கள் குழந்தையின் RESPக்கு பணம் செலுத்துகையில், அரசாங்கம் வழங்குவது:

40% கூடுதல் பணம்: உங்கள் வருமானம் $45,282 பணத்துக்கு குறைவாக இருந்தால்

30% கூடுதல் பணம்: உங்கள் வருமானம் $45,283 - $90,563 பணத்துக்குள் இருந்தால்

20% கூடுதல் பணம்: உங்கள் வருமானம் $90,564 பணத்துக்கு அதிகமாக இருந்தால்

ஒரு குழந்தைக்கு வாழ்நாள் முழுவதற்கும் அதிகபட்சம் $7,200 வரை

கனடாவின் கல்விச் சேமிப்புகள் உதவித்தொகையை நான் எப்படிப் பெறுவது?

அரசாங்கத்திடம் இருந்து ஒரு பொருத்தமான உதவித்தொகையைப் பெற நீங்கள் ஒரு RESPக்கு பணம் செலுத்த வேண்டும். ஒரு கல்விச் சேமிப்புகள் திட்டத்தில் பதிவுசெய்ய நீங்களும் உங்கள் குழந்தையும் இருவரும் ஒரு சமுதாயக் காப்பீட்டு எண்ணை வைத்திருக்க வேண்டும்.

இதற்கான பிடிமானம் என்ன?

கனடா கல்விச் சேமிப்புகள் உதவித்தொகையை இடைநிலைக்கல்விக்குப் பின்னர் மட்டுமே பயன்படுத்த முடியும். உங்கள் குழந்தை அதனை பயன்படுத்த வேண்டும் அல்லது இழந்து போக வேண்டும்! மேல்நிலைப் பள்ளிக்குப் பின் உங்கள் குழந்தை கல்வி கற்காவிட்டால், கனடா அரசாங்கம் உதவித்தொகையாக உங்களுக்குக் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும்.

எவ்வாறு தொடங்குவது